அத்துமீறி கடற்தொழில் ஈடுபட்ட 14 இந்தியர்கள் அதிரடி கைது.

0

அத்துமீறி கடற்தொழில் ஈடுபட்ட மேலும் 14 இந்திய மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய யாழ்ப்பாணம்- எழுவை தீவுக்கு அருகே அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் கைதான இந்திய மீனவர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முனெடுக்கப்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply