இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கப்பல் ஒன்றில் உள்ள எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டாவதாக வந்த கப்பல் ஒன்றில் இருந்தே எரிவாயுவை இறக்குவதற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அண்மையில் விட்ரோ நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட எரிவாயு தாங்கி ஒன்று இலங்கையை வந்தடைந்தது.
நுகர்வோர் விவகார அதிகார சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை தரநிர்ணய நிறுவனம் உட்பட பல குழுக்கள் அதன் தரம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இதன்போது இந்த எரிவாயுவில் புரொப்பேன் மற்றும் பியூட்டேன் கலவை தரமானதாக இருந்தது தெரியவந்துள்ளது.
ஆனால் எதில் மெர்கப்டன் என்ற ரசாயனம் தேவையான தரத்தை பூர்த்தி செய்யவில்லை என ஆய்வில் தெரியவந்தது.
இதன் பிரகாரம் கப்பல்களில் எரிவாயுவை இறக்குவதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அனுமதி வழங்கவில்லை.
இருப்பினும் கப்பல் ஒன்றிலிருந்து எரிவாயுவை இறக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



