சந்தையில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி.

0

பொருளாதார மையங்களில் கறிமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் தவிர்ந்த ஏனைய மரக்கறிகளின் விலை ஓரளவு குறைவடைந்துள்ளது.

இதற்கமைய நாரஹேன்பிட்டி பொருளாதார மையத்தில் நேற்றைய தினம் ஒரு கிலோ கிராம் கறி மிளகாயின் சில்லரை விலை 800 ரூபாவாகவும், மொத்த விலை 750 ரூபாவாகவும் காணப்பட்டது.

அத்துடன் பச்சைமிளகாய் ஒரு கிலோ 900 ரூபாய்க்கு விற்பனையானது.

அவ்வாறு இரத்மலானை பொருளாதார மையத்தில் ஒரு கிலோ கிராம் கறிமிளகாயின் சில்லரை விலை 650 ரூபாவாகவும் பச்சை மிளகாய் ஒரு கிலோ கிரேம் ஆயிரம் ரூபாய் அளவிலும் காணப்பட்டது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கறிமிளகாய் ஒரு கிலோ 550 ரூபாய்க்கும் , பச்சை மிளகாய் ஒரு கிலோ 800 ரூபாய்க்கும் விற்பனையானது.

அவ்வாறு போஞ்சி ஒரு கிலோ கிராமின் மொத்தவிலை 280 ரூபாவாக காணப்பட்டது.

மேலும் நாரஹேன்பிட்டி பொருளாதார மையத்தில் போஞ்சி ஒரு கிலோகிராமின் மொத்தவிலை 380 ரூபாவாகவும், சில்லரை விலை 400 ரூபாவாகவும் காணப்பட்டது.

Leave a Reply