நாட்டில் மீண்டும் இசை நிகழ்ச்சிகளை ஆரம்பிப்பது தொடர்பில் இசைக்குழுவின் பிரதிநிதிகள் தயாரித்த யோசனைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பூரண கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட ரசிகர்களை மாத்திரம் இந்த இசை நிகழ்ச்சிகளை பார்வையிட அனுமதிக்குமாறு அந்த யோசனையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



