வேளாண் சடங்குகளை மத்திய அரசு திரும்பப் பெற்றதுடன், விவசாயிகளின் பிற கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்பதற்கான உறுதியையும் வழங்கியுள்ளது.
இந்நிலையில் போராட்டத்தை முடித்துக் கொண்டு டெல்லி இலைகளிலிருந்து விவசாயிகள் மீண்டும் வீடு திரும்பினர்.
இதன் பிரகாரம் காசிப்பூர் எல்லையில் முகாம் இடப்பட்டிருந்த விவசாயிகளின் கடைசி குழுவும் நேற்றைய தினம் வீடு திரும்பியுள்ளது.
அங்கு குறித்த போராட்டத்தை பொறுப்பேற்று நடத்தி வந்த பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத்தும் இந்தக் குழுவுடன் தனது சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
முன்னதாக அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது இன்று நான் மிகவும் உணர்ச்சி வசமாக உள்ளேன், கடந்த 13 மாதங்களாக இந்த இடம்தான் எங்களுக்கு வீடாக இருக்கின்றது .
விவசாயிகளின் உரிமைகளுக்கான இந்த இயக்கம் ஒருபோதும் நின்றுவிடாது.
இங்கேயும் போராட்டத்தை நாங்கள் தற்காலிகமாகவே நிறுத்தியுள்ளோம்.
எங்களுக்கு அளித்த உறுதிமொழி படி குறைந்தபட்ச ஆதரவு விலை காண சட்டம் இயற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.



