புதிய சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பான சுகாதார வழிகாட்டியொன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த சுகாதார வழிகாட்டி இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சுகாதார வழிகாட்டியில் திருமண நிகழ்வுகளில் மண்டபம் கொள்ளளவில் ஐம்பது சதவீதமானோர் மாத்திரம் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் திருமண நிகழ்வுகளில் மதுபான பாவனைக்கு முன்னதாக விதிக்கப்பட்டிருந்த தடையை இந்த புதிய சுகாதார வழிகாட்டியின் ஊடாக தளர்த்தப்பட்டுள்ளது.
இவற்றை விட மரணச் சடங்குகளில் ஒரே தடவையில் 30 பேர் மாத்திரம் பங்கேற்க முடியும் எனவும் இந்த சுகாதார வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.



