யாழ் நயினாதீவு தண்ணீர் தாங்கி குளத்துக்கரையில் அருகே அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய உயிரிழந்த நபர் பல நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த சடலம் இதுவரையில் அடையாளங் காணப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுள்ளது.
இதன் பின்னர் குறித்த சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காகக் காவற்துறையினரால் பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
மேலும் கடந்த வியாழக்கிழமையில் இருந்து நயினாதீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .



