3 கோடி ரூபாய் கஜ முத்துடன் நபரொருவர் அதிரடிக் கைது.

0

3 கோடி ரூபாய் பெறுமதியுடைய கஜமுத்துடன் நபர் ஒருவர் ஒருவன் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த நபர் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே கைது செய்யப்பட்டுள்ளார்..

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து மூன்று கோடி ரூபாவுக்கு அதிகமான 3 கஜ முத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது .

அத்துடன் 45 வயதினைடைய கதிர்காமம் திஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யால தேசிய வன ஜீவராசிகள் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply