நாடளாவிய ரீதியில் கொவிட் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைவடைந்து வருகின்றது.
இந்நிலையில் மனிதரின் இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் நிலையில் பொருளாதார சூழலின் அடிப்படையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
இதற்கமைய இன்று தங்கம் விலை மீண்டும் சரவனுக்கு ரூபா 184 குறைவடைந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சரவனுக்கு ரூபா 184 குறைந்து ரூபா 36,152 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராமுக்கு ரூபாய்,23 குறைவடைந்து ரூபாய் 4,519 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைவடைந்து ஒரு கிராம் வெள்ளி 64,60 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 64,600 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



