யாழ் தபால் நிலையத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான வாகனம் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாகனத்தை தாக்கி விட்டு தப்பி சென்றதாக தெரியவந்துள்ளது.
இதனால் காரின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளது.
மேலும் இது தொடர்பாக ஏற்கனவே காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



