பாடசாலை மாணவர்கள் 17 பேருக்கு நேர்ந்த கதி.

0

பாடசாலை மாணவர்கள் 17 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இதற்கமைய ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பொகவந்தலாவை எல்பட தமிழ் வித்தியாலயத்திற்கு இன்று அதிகாலை வருகைதந்த மாணவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி உள்ளனர்.

அத்துடன் பாடசாலையில் கட்டிடம் ஒன்றுக்கு அருகாமையில் உள்ள பாரிய மரமொன்றிலிருந்து குளவி கூட்டினை கழுகு ஒன்று மோதியதால் குளவிகள் களைந்து வந்து மாணவர்களை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தரம் 6 தொடக்கம் 11 வரையான மாணவர்களும் மற்றும் தரம் 8 மாணவிகளும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் நோர்வூட் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply