உந்துருளி ஒன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய குறித்த சம்பவம் சிலாபம் – கொழும்பு பிரதான வீதியின் இரட்டை குளம் பகுதியில் சம்பவித்துள்ளது.
அத்துடன் 53 வயதான தாயும் 23 வயதான அவரது மகனுமே இந்த விபத்து சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



