டெங்கு ஒழிப்பு விதிமுறைகளை மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி.

0

நாட்டில் தற்போது டெங்கு நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதன் பிரகாரம் டெங்கு ஒழிப்பு தொடர்பில் தற்போதுள்ள விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளை மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன் நவம்பர் மாத இறுதி வரை நாட்டில் 25,910 நபர்கள் டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்பதுடன் 19 மரணங்களும் சம்பவித்துள்ளன.

மேலும் டெங்கு நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நிரந்தரமாக முன்னெடுப்பதற்காக ஒவ்வொரு நிறுவனத்திலும் அர்ப்பணிப்புள்ள அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கு சமர்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply