தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை.

0

இலங்கையில் கொவிட் 19 பரவலை தடுப்பதற்காக தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தடுக்கும் நோக்கில் தற்போது சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த விடையத்தை கருத்திற் கொண்டு பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply