உலகை ஆளும் முப்பெரும் தெய்வங்களும் அரசமரத்தில் தான் வாசம் செய்கின்றனர்.
எனவே அரச மர இலையை வைத்து இந்த பூஜையை செய்வதன் மூலம் நமது பாவங்கள் அனைத்தும் தீர்ந்து நாம் நினைப்பது அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
அதற்காக பூஜை அறையின் முன் அரச இலையை வைத்து, அதன் மீது ஒரு அகல் விளக்கிற்க்கு மஞ்சள் ,குங்குமம் பொட்டு வைத்து வைக்கவேண்டும்.
பிறகு அதில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த தீபத்தை ஏற்றி, கண்களை மூடி, கைகளைக் கூப்பி, குல தெய்வத்தை நினைத்துக் கொண்டும், துர்கை அம்மனை நினைத்து கொண்டும், நான் செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து, எனது வாழ்க்கை முன்னேறவும், எனது தலைமுறையினரின் நலனுக்காக சொத்துக்கள் வாங்கவும் அருள் புரிய வேண்டும்.
என மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
இந்த தீபத்தை தினமும் வரும் ராகு கால நேரத்தில் ஏற்றி வர வேண்டும்.
இதனை ஏற்றுவதற்கு இத்தனை நாட்கள் என்ற கணக்கு ஏதும் கிடையாது.
இதனைத் தொடர்ந்து ஏற்றிவர உங்கள் வாழ்க்கையில் இனிமையான தருணங்கள் வரத் தொடங்கும்.
