நாடு பூராகவும் இடம்பெற்ற மின்வினியோகம் தடை காரணத்தால் நாடாளமன்ற அலுவலகங்களின் செயற்பாடுகளுக்கும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் காலை சில நிமிடங்கள் மின்தடை ஏற்பட்டதனால் நாடாளுமன்ற அமர்வு தொடர்பான நேரலை மற்றும் சில அலுவல்களும் பாதிக்கப்பட்டதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நாடளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் நாட்டில் ஏற்பட்ட மின் தடை பற்றி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் மூலம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சபாநாயகரிடம் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.



