அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலையான அசாத் சாலி.

0

சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்து விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதற்கமைய குறித்த தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா வழங்கியுள்ளார்.

தீர்ப்பை அறிவித்த நீதிபதி, இனங்கள் அல்லது மதங்களின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், மக்கள் மத்தியில் கோபத்தை தூண்டும் வகையிலும் இதுபோன்ற கருத்துகளை பிரதிவாதி கூறியதாக முறைப்பாட்டாளர்கள் நிரூபிக்க தவறிவிட்டதாக குறிப்பிட்டார்.

மேலும் கடந்த மார்ச் 9ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்தின் ஊடாக, மதக் குழுக்களுக்கு இடையில் பகைமையை தூண்டியமை, பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தத்தை மீறிய இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply