நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினர் நடத்திய ஆர்ப்பாட்டம்.

0

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் “பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்து ” என்னும் சுவரொட்டியை ஏந்தியபடி இன்று நாடாளுமன்றம் சபா பீடத்திற்கு சென்றனர்.

இதற்கமைய குறித்த உறுப்பினர்கள் தமது கைகளில் செம்மஞ்சள் நிற பட்டி அணிந்துள்ளனர்.

அத்துடன் ரோகினி விஜேரத்னவும் செம்மஞ்சள் நிறப் புடவை அணிந்து நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தனர்.

மேலும் இன்றைய தினம் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாகும்.

அதனை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை பாதீட்டு விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜயரத்ன தொடர்பில் சக நாடாளுமன்ற உறுப்பினரான ஜானக திஸ்ஸகுட்டியாராய்ச்சி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply