தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் பருவ மழை பெய்ய தொடங்கியது.
இதன் காரணத்தால் தமிழகத்துக்கு தக்காளியின் வரத்து குறைந்துள்ளது.
இதன் காரணத்தால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தக்காளியின் விலை கிலோவுக்கு ரூபா 180 வரை விற்கப்பட்டது.
அன்றாட சமையலுக்கு தேவைப்படும் தக்காளியின் விலை அதிரடியாக உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அவ்வாறு தக்காளியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி அவர்கள் அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
தொடர்ந்தும் பசுமைப் பண்ணை கடைகளில் தக்காளி விலை கிலோவுக்கு 70 தொடக்கம் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன.
இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ நாட்டு தக்காளி விலை 30 ரூபாவாக குறைந்தது.
கோயம்பேட்டு சந்தையில் மொத்த விற்பனையில் நேற்று முதல் ரக தக்காளி கிலோவிற்கு 110 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 30 ரூபாவாக குறைந்து, கிலோவுக்கு ரூபாய் 80 ஆக விற்பனையாகின்றது.
இதன் பிரகாரம் தக்காளியின் விலை சற்று குறைவடைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



