பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளருக்கு கொவிட் தொற்று.

0

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ் ஆகும்.

குறித்த நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்நிலையில் தற்போது நடிகர் கமலஹாசனுக்கு தற்போது கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் இவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுளார்.

இதனால் சில வாரங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகி அவர் ஓய்வு எடுக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

இதன் பின்னர் வெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதற்கமைய பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply