கோவிலில் விளக்கு ஏற்றும் பொழுது கண்ட இடங்களில் வைத்து ஏற்றக்கூடாது.
அதற்கு என கொடுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே விளக்கினை ஏற்ற வேண்டும்.
ஒருவர் ஏற்றிய விளக்கில் இன்னொருவர் தீபத்தை எரிய விடலாமா? என்று கேட்டால், தாராளமாக எரிய விடலாம்.
உங்கள் கைகளால் விளக்கு ஏற்றப்பட வேண்டும் என்பது தான் நியதி.
அதை எப்படி ஏற்றினாலும் பரவாயில்லை.
இறைவனுக்கு ஏற்றப்படும் விளக்கை கிழக்கு திசையில் அல்லது வடக்கு திசையில் வைத்து ஏற்ற வேண்டும்.
எந்த திசையிலும் ஏற்றலாம் என்று ஏற்றக்கூடாது.
அதே போல விளக்கு ஏற்றி வைத்த பின்பு அதனை வரிசையாக சுற்றி வைத்து அலங்கரிக்க கூடாது.
ஒரே திசையில் நீங்கள் எத்தனை ஏற்றினாலும் அதனை வைக்க வேண்டும்.
ஒரு விளக்கிற்கும் இன்னொரு விளக்கிற்கும் இடையில் இடைவெளி இருக்க வேண்டும்.
விளக்கு ஏற்ற எண்ணெய், திரி போன்றவற்றை கடன் வாங்க கூடாது
