தோப்பூர் டெங்கு களவிஜயத்தில் 43 இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டு பிடிப்பு,இருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை.

0

தோப்பூர் பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பாலத்தோப்பூர், தோப்பூர், அல்லை நகர் மேற்கு, அல்லை நகர் கிழக்கு, இக்பால் நகர் பகுதிகளில் நேற்றையதினம் மூதூர் சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் ஹில்மி முகைதீன் பாவா அவர்களின் தலைமையில் அலுவலக குழாத்தினரால் வீட்டுக்கு வீடு டெங்கு கட்டுப்பாடு கள பரிசோதனை செய்யப்பட்டன.

இதன்போது 13 குழுக்களாக மொத்தமாக 512 வீடுகள் பரிசோதிக்கப்பட்டதுடன் 43 இடங்களில் டெங்கு நுளம்பு குடம்பிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன, சுற்றுப்புறத்தை தூய்மையாக பேணாமல் நுளம்பு பெருக வழிவகுத்தவர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதுடன் 02 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளன.

உங்கள் வீடு மற்றும் சுற்றுப் புறத்தினுள் நுளம்பு பெருக சாத்தியமான பொருட்கள் அதிகமாக காணப்படுவதுடன் பெய்ந்து விட்ட மழையினால் அனைத்திலும் நீர் தேங்கி காணப்படுகின்றன.

இவ்வாறான பொருட்களை உடனடியாக நேரம் ஒதுக்கி அகற்றுவதுடன் இதர நுளம்பு பெருகும் இடங்களையும் சுத்தப்படுத்தி டெங்கு நோயிலிருந்து பாதுகாப்பு பெருவதுடன் உங்கள் ஒத்துழைப்புக்களையும் வழங்கவும் என மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொதுமக்களை மேலும் கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply