சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் மகளிர் உதவி மத்திய நிலையத்தின் 1938 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு நாளொன்றுக்கு சுமார் 400 முதல் 500 தொலைபேசி அழைப்புகள் வருவதாக அந்த உதவி மத்திய நிலையத்தின் அதிகாரி மானல் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய உள் வரும் அழைப்புகளில் 50 % பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பானவை மற்றும் பெண்களுக்கு எதிரான பிற வன்முறைகள் குறித்து சுமார் 80 முதல் 100 முறைப் பாடுகள் பெறப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குடும்பங்களில் நிலவும் பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் ஆண்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருப்பது போன்ற காரணத்தால் இவ்வாறான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
அவ்வாறு கொவிட் தொற்றுநோய் காரணத்தால் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த காலங்களில் இவ்வாறான அழைப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
மேலும் அக்டோபர் மாதத்தில் மாத்திரம் 4,000 அழைப்புகள் கிடைத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே பாரிய அசம்பாவிதங்கள் ஏற்படும் இடத்தில் காவல்துறையினரின் உதவியுடன் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகளிர் உதவி மையத்தின் அதிகாரியான மானெல் ஜயமான்ன குறிப்பிட்டுள்ளார்.



