தற்போது மரக்கறிகளின் விலை அதிகரித்து வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மரக்கறிகள் பயிரிடப்படாததால் வடக்கிலும் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து வட மாகாணத்துக்கு மரக்கறிகள் கொண்டு செல்லப்பட வேண்டியதன் காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து இருந்தபோதிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பயிரிடப்படும் மரக்கறிகள் வடமாகாணத்தில் உள்ளேயே பயிரிடப்படுவதால் அம் மாவட்டத்தின மரக்கறிகளின் விலைகள் இதற்கு முன்னர் உயர்த்தப்படவில்லை.
மேலும் உர நெருக்கடி கொவிட் தொற்று மற்றும் சீரற்ற வானிலை காரணத்தால் வடமாகாண விவசாயிகள் மரக்கறிகளை பயிரிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.



