தேவையான அளவு பெட்றோல் கையிருப்பில் உள்ளது.

0

தற்போது போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கையின் மொத்த பெட்றோலிய களஞ்சியசாலை தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய முத்துராஜவெல களஞ்சியசாலையில் தற்போது 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாளைய தினம் 36 ஆயிரம் மெட்ரிக் டன் பெட்றோல் கிடைக்கவுள்ளது.

அவ்வாறு எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் கொண்டுவரப்படவுள்ளது.

ஆகவே பொதுமக்கள் எந்தவிதமான அச்சமும் கொள்ளத் தேவையில்லை என இலங்கை மொத்த பெட்றோலிய களஞ்சிய சாலை தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply