இலங்கையில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு.

0

சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய களஞ்சிய சாலையில் மசகு எண்ணெய் தீர்ந்தன் காரணத்தால் எரிபொருள் உற்பத்தி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பெட்ரோலிய தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதற்கமைய இன்று முதல் இந்த எரிபொருள் உற்பத்தி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மசகு எண்ணையை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில எடுக்காமையே இதற்கு பிரதான காரணம் என பெட்ரோலிய தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக பொது மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலிய தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 15 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே தற்போது கையிருப்பில் உள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய மொத்த களஞ்சியசாலை தலைவர் மொஹமட் உவைஸ் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply