திருகோணமலை,தம்பலகாமம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட கல்மெடியாவ உல்பெத்வெவ பகுதியில் இறந்த நிலையில் யானைகளின் இரு உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
இரு ஆண் யானைகளின் உடலமே இவ்வாறு நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது .
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது சுமார் 20 வயது மதிக்கத்தக்க இவ் யானைகளில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை மின்சார யானை வேலியில் சிக்குண்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் குறித்த சம்பவ இடத்துக்கு வின விலங்கு ஜீவராசி திணைக்களத்தினர் சென்று பிரேத பரிசோதனை மேற்கொள்ளவுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை தம்பலகாமம்காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.



