கொழும்புக்கு செல்லும் வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட விசேட எச்சரிக்கை.

0

கொழும்பு புதிய களனி பாலத்தின் நிர்மாண பணிகள் காரணமாக மூடப்படும் வீதி தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதியினருக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

இந்நிலையில் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொடை இடை மாறல் மற்றும் புதிய களனி பாலம் வரையான பகுதி எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும் மூடப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் அனைவரும் குறித்த வீதிக்கு பதிலாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply