கொழும்பு கண்டி பிரதான வீதியின் கடுகண்ணாவ பகுதி தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.

0

கொழும்பு கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவ பகுதி தொடர்ந்து மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய மண்சரிவு அபாய நிலை காரணத்தால் நேற்று முன்தினம் குறித்த பாதை மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில்மறு அறிவித்தல் வரை குறித்த பாதை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பகுதியில் பயணம் மேற்கொள்பவர்கள் மாற்று வீதியினை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply