திருகோணமலை ,மூதூர் காவற்துறை பிரிவுக்குட்பட்ட பெரிய பாலம் பகுதியில் கர்ப்பிணி பசுவொன்றை மிகவும் கடுமையாக தாக்கி உயிரிழக்கச் செய்துள்ளதாக கால் நடை வளர்ப்பாளர் காவற்துறையில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த கால் நடை வளர்ப்பான பால் தரும் கர்ப்பிணி பசு இவ்வாறு வீட்டு உரிமையாளர் ஒருவரால் மிக கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழக்கச் செய்துள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை மூதூர் காவற்துறையினர்ர் முன்னெடுத்துள்ளனர்.



