மழை முற்றிலும் நிற்கும் வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும்.

0

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணத்தால் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து காணப்படுகின்றது.

இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி சார்பில் இலவசமாக மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது.

இந்நிலையில் மழை பாதிப்புகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பார்வையிட்ட போது அம்மா உணவகத்திற்கு சென்று அங்கு உள்ள உணவை உண்டார்.

அதைத் தொடர்ந்து அனைத்து அம்மா உணவகங்களிலும் மழை முற்றிலும் நிற்கும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் மற்றும் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதனையொட்டி இன்று முதல் சென்னையில் உள்ள 403 அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் உணவு இலவசமாக வழங்கப்படுகின்றது.

மேலும் காலையில் இட்லி, மதியம் சாம்பார் சாதம், இரவு சப்பாத்தி போன்றவை இந்த உணவகங்களில் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply