தமிழகத்திலுள்ள 12 அடி உயர ஆதிசங்கர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்துள்ளார்.
இதற்கமைய பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை கேதார்நாத் கோவிலில் தரிசனம் செய்தார்.
அதன் பின்னர் அதற்கு அருகிலுள்ள ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் புனரமைக்கப்பட்ட சமாதி தளத்தில் நிறுவப்பட்டுள்ள 12 அடி உயர ஆதிசங்கர் சிலையை இன்றைய தினம் திறந்து வைத்துள்ளார்.
2013ஆம் ஆண்டு உத்தரகாண்டில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது கேதார்நாத் கோவில் சேதம் அடைந்தது .
இதன்போது கோவில் அருகே உள்ள ஆதிசங்கரர் சிலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதனால் ஆதிசங்கர் சமாதியும் பாதிக்கப்பட்டது.
தற்போது கோவில் மற்றும் சமாதி புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



