இராஜகிரிய பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்றிற்கு முன்னால் ATM இயந்திரத்தை உடைத்து பணம் திருட முற்பட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இயந்திரத்திற்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் இதுவரையில் கணிக்கப்படவில்லை .
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் கோட்டை நகரசபை ஊழியர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



