தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் 47 சதவீதம் வரை மழை கிடைக்கிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது இவ்வாறு இந்த ஆண்டும் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே கடந்த காலங்களில் வட கிழக்கு பருவமழை காலத்தில் ஒக்கி, வர்தா, கஜா, நிவர் உள்ளிட்ட புயல்களால் தமிழகத்தில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டது.
இதன்படி குறித்த விடயத்தினை கருத்திற் கொண்டே தமிழக அரசினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி நடைபெற்று முடிந்துள்ளது.
இதன் காரணத்தினால் இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



