டெல்லியில் தீ விபத்தில் சிக்கி நால்வர் உயிரிழப்பு!

0

டெல்லியில் மூன்று மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் இன்று காலை தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த வீட்டின் 3-வது மாடியில் உள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்த நான்கு பேர் இந்த விபத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் வீட்டில் பரவிய தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் மூன்றாவது மாடியில் தூங்கிக் கொண்டிருந்த 4 பேரும் தீ விபத்தில் சிக்கி உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply