இலங்கையில் விவசாயிகள் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுப்பதன் ஊடாகவே இலக்கை நோக்கி பயணிக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதற்கமைய சுற்றாடலையும், பொதுமக்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்புடன் , அதிக இலாபத்தை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பாகும்.
குறித்த விடயம் ஊடாகவே அரசாங்கம் எதிர்பார்க்கும் இலக்கை அடைய முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் .
அவ்வாறு ஒரு போகாம் மற்றும் மறு போகதுக்கு மாத்திரமல்லாது பல சந்ததியினரை பயன் பெறச் செய்வதே பசுமை விவசாயத்தின் இலக்காகும்.
குறித்த விடயம் தொடர்பில் விவசாயிகளை சந்தித்து விடயங்களை தெளிவு படுத்துவது மிக முக்கியமாகும் என தெரிவித்துள்ளார் .
மேலும் இவ்வாறு விவசாயிகள் முகம்கொடுக்கும் பிரதான பிரச்சினையை அடையாளம் கண்டு அது தொடர்பாக அரசாங்கத்தை அறிவுறுத்துவது அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.



