நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க புதிய அலுவலகம் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
இதற்கமைய இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கலந்துகொண்டு இந்த அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார்.
இதன் பின்னர் ஒரத்தநாடு புதூரில் செயல்பட்டு வரும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
அங்கு சென்று நெல்லை விற்பனை செய்ய காத்திருந்த விவசாயிகளை சந்தித்து உரையாடியிருந்தார்.
அதேபோல் 17 சதவீதத்திற்கும் கூடுதலான ஈரப்பதமுள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஒரு மூட்டைக்கு ரூ.20-யை கூலியாக அரசு வழங்க வேண்டும்.
அத்துடன் வியசாயிகளினால் விளைவிக்கும் நெல் ,கரும்பு போன்ற உற்பத்தி பொருட்களுக்கான விலையினை அதிகரித்து இலாபகிரமான விலையை வழங்கவேண்டும் .
மேலும் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி விரைவில் திருச்சியில் 45 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட இருக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



