தென்னிந்திய திரையுலகில் மிகவும் குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமடைந்த நடிகை தான் கீர்த்தி சுரேஷ்.
இவர் தற்போது தமிழில் ரஜினியுடன் அண்ணாத்த, செல்வராகவனுடன் சாணிக்காயுதம் ஆகிய படங்களில் நடித்தவர்.
அத்துடன் தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் சர்க்காரு வாரி பட்டா மற்றும் சிரஞ்சீவியுடன் வேதாளம் ரீமேக் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இவர் எப்போதும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.
அவ்வப்போது இவர் இரசிகர்களை கவரும் வகையில் தனது புகைப்படங்களை அல்லது வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருப்பார்.
இந்நிலையில் இவர் அழகிய சிரிப்புடன் காரில் ஏறிச் செல்லும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



