விஜய் சேதுபதியை பார்த்து பயந்த சிம்பு!

0

தமிழ் சினிமா திரையுலகில் பல ஆண்டுகளாக நடித்து தனித்து விடப்பட்ட நடிகராக இருந்தவர் தான் நடிகர் அருண் விஜய்.

இவர் வாரிசு நடிகராக இருந்தாலும் தன் உழைப்பால் இந்த இடத்தை பிடித்துள்ளார்.

பல படங்கள் தோல்வியானாலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.

அவரின் சினிமா வாழ்க்கையில் பெரிய பெயர் கொடுத்து பிரபலப்படுத்திய படம் நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால்.

குறித்த படத்தில் வில்லனாக நடித்து நல்ல வரவேற்பு பெற்று அருண் விஜய் முன்னணி இயக்குனர்கள் படத்தில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

அத்துடன் விஜய்சேதுபதி,சிம்பு,அரவிந்த்சாமி,ஜோதிகா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கி வெளியான படம் செக்கச் சிவந்த வானம்.

குறித்த படத்தில் கிளைமேக்ஸ் காட்சிகளில் எப்படி எடுக்கப்பட்டது என்றும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

மேலும் அதில் கார் சீன் மிகக் கடுமையான பெரிய ஷாட்கள் அமைக்கப்பட்டு நான்கு கேமராக்களுடன் எடுக்கப்பட்டது.

கார் சீசனில் சிம்பு கொஞ்சம் விஜய் சேதுபதி கார் ஓட்டுவதற்கு பயந்தார் என்றும் நான் சரியாக ஓட்டுவேன் பயப்பட வேண்டாம் எனக்கூறி ஒருமுறை பயமுறுத்தி விட்டார்.

இதனால் சிம்பு பயந்து உள்ளார் என்று கூறியுள்ளார் அருண் விஜய்.

Leave a Reply