அமெரிக்காவின் பெடரல் வங்கியின் வட்டி விகிதம் மாற்றம் தொடர்பான எதிர்பார்ப்பு, டாலரின் மதிப்பு உயர்வு மற்றும் இந்திய பொருளாதாரம் குறித்த சாதகமான கணிப்புகளால் இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத அளவில் ஏற்றம் கண்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்றைய தினம் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1030 புள்ளிகள் வரை உயர்ந்தது உச்சத்தை எட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இன்றைய தினமும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்பாக காணப்படுகின்றது.
மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் 60000 புள்ளிகள் என்ற மைல்கல்லை கடந்தது.
இன்று காலை 11 மணி நிலவரப்படி 60267 ஒழுங்கற்ற நிலையில் சென் செக்ஸ் உச்சத்தில் இருந்தது.
அவ்வாறு தேசிய பங்குச் சந்தையில் 17933 புள்ளிகள் என்ற உச்சத்தை எட்டியது.
காளி வர்த்தகத்தின் போது அதிக லாபம் ஈட்டிய நிறுவனம் இன்போசிஸ் ஆகும்..
குறித்த நிறுவன பங்குகள் 2 சதவீத அளவிற்கு உயர்வடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



