ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக திம்புள்ள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் 60 வயதினையுடைய கொட்டகலை வூட்டன் பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 9ஆம் திகதி முதல் காணாமல் போய்விட்டதாக காவல் நிலையத்தில் அதற்கு உறவினர் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பல கோணங்களில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



