ஒரு தொகை ஐஸ் ரக போதைப் பொருளுடன் நால்வர் அதிரடிக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய சுமார் 8 கோடி பெறுமதியான ஐஸ் ரக போதைப் பொருளே கைப்பற்றப்படுள்ளது.
இந்த சம்பவம் தலைமன்னர்- ஒரு மலைப்பகுதியில் இடம் பெற்றுள்ளது.
அந்தப் பகுதியில் கடற்படையினரால் விசேட ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது இந்தியாவில் இருந்து இலங்கையை நோக்கி சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்துக் கொண்டிருந்த படகு ஒன்றை சோதனையிட்ட கடற்படையினர் அதிலிருந்து 9 கிலோ 914 கிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டதுடன் அதிலிருந்து நால்வரை கைது செய்துள்ளனர்.
அத்துடன் உருமலை பிரதேசத்தைச் சேர்ந்த 28-37 வயதிற்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது,



