130 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

0

130 குழந்தைகள் பாதிக்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,

இதற்கமைய மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளுடன் இவ்வாறு 130 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் இரு குழந்தைகளில் நிலமை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கொவிட் தொற்றின் மூன்றாம் நிலை குழந்தைகளுக்கு அதிக ஆபத்தை உருவாக்கலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் ஜல்பைகுரி மாவட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல் வயிற்றுப்போக்கு பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவசியம் ஏற்படும் பட்சத்தில் மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள 130 குழந்தைகளுக்கும் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply