டெல்லி திகார் சிறைச்சாலையில் ஆயுதங்களால் கைதிகள் மோதல்!

0

டெல்லி திகார் சிறைச்சாலையில் கைதிகள் சிலர் திடீரென ஆயுதங்களை கொண்டு ஒருவரை ஒருவர் மோதி தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவத்தில் இரண்டு நபர்கள் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் திகார் சிறைச்சாலையில் மூன்றாவது பிரிவில் நடந்த மோதல் பற்றி தற்போது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த மோதலில் காயமடைந்த கைதிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை முடிந்ததும் அவர்கள் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply