இலங்கையின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாதிரி ஆகிய மாவட்டங்களிலும். இன்று சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்பில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
மேலும் காலிலிருந்து ஹம்பாந்தோட்டையுடாக பொத்துவில் வரையான கடற்பரப்பிலும் புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பரப்பும் கொந்தளிப்பாக காணப்படும்..
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அனைவரும் அறிவுறுத்தப்படுகின்றனர்.



