கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதியில் இருந்து கடந்த மூன்றாம் திகதி வரையில் இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் இறக்குமதி வரி வருமானமாக 9.34 பில்லியன் ரூபாவாக ஈட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த காலப்பகுதியில் சுங்க திணைக்களத்தால் அனுமதி அளிக்கப்பட்ட ஏற்றுமதிகளின் பெறுமதி 46.43 பில்லியனாக பதிவாகியுள்ளது.
மேலும் நாட்டில் தற்போது அதிகரித்து வரும் கொவிட் 19 தொற்றுப்பரவல் காரணத்தினால் சுங்கத்தினரின் கடமைகளில் கணிசமான அளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள போதிலும் சுங்கத் திணைக்களம் கடுமையான சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தொடர்ச்சியாக தனது சேவைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



