மட்டக்களப்பு மாவட்டத்தில் தாராபுரம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய 90 கிராம் கஞ்சாவுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் 24 வயதினையுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த நபர் கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது கைது செய்யபட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்.



