எகொட உயன காவல்துறை அதிகாரி பிரிவிற்குட்பட்ட முகத்துவாரம் பிரதேசத்தில் பெண்ணொருவர் ஹெரோயின் வைத்திருந்த கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த பெண்ணிடமிருந்து 5 கிராம் 200 மில்லிக் கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன் மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



