இலங்கையில் சீனி களஞ்சியசாலைகள் மீது விசேட சோதனை நடவடிக்கை!

0

நுகர்வோர் அதிகார சபையிடம் இதுவரை காலமும் பதிவினை மேற்கொள்ளாதுள்ள சீனி களஞ்சியசாலைகளை அடையாளம் காண்பதற்காக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது சீனியின் விலை உயர்வடைந்துள்ள நிலையில் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சீனியை பதுக்கி வைத்துள்ளமை தொடர்பில் நுகர்வோர் அதிகார சபைக்கு தகவல் கிடைத்துள்ளது.

அவ்வாறு சீனியை பதுக்கி வைத்திருந்த 4 களஞ்சிய சாலைகளில் நுகர்வோர் அதிகார சபையினால் கடந்த நாட்களில் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது 5,400 மெட்ரிக் தொன் சீனி கையகப்படுத்தப்பட்டது.

அத்துடன் நாட்டிற்கு சீனியை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் நுகர்வோர் அதிகார சபையில் பதிவினை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு சீனியை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை அபராதத் தொகைக்கு மேலதிகமாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி சிறை தண்டனை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன சட்டமா அதிபருடன் கலந்துரையாடியுள்ளார்.

Leave a Reply