இலங்கையில் நாளுக்கு நாள் 25 முதல் 30 குழந்தைகள் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுவரையில் கொழும்பு சிறுவரல் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் குறித்த தொற்றுக்குள்ளாகி 18 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றுக்குள்ளான 165 சிறுவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



